நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தமிழில் வெளியான “தோழா” படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார்.
unknown nodeபடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகிபாபு என பலரும் இந்த படத்தி நடித்து வருகின்றனர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னை கோகுலம் ஸ்டூடியோ, ஓ.எம்.ஆரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் லுக் வெளியானதைத் தொடர்ந்து படப்பிடிப்பு அரங்குகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தி விறு விறுப்பாக படப்பிடிப்பை நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த நிலையில், வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு தளபதி 66 பர்ஸ்ட் லுக் போஸ்டரை டைட்டிலுடன் வெளியீடவுள்ளதாக அறிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த படத்தின் டைட்டில் இது தான் என ஒரு தகவல் பரவிவருகிறது .
unknown nodeஅது என்னவென்றால், படத்திற்கு “வாரிசு” என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளார்களாம். இந்த டைட்டிலை தவிர்த்து மொத்தம் 15 டைட்டில்கள் முடிவு செய்து வைத்துள்ளார்களாம் . இதில் வாரிசு என்ற தலைப்பை வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்ப தகுந்த சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றார்கள். எந்த டைட்டில் வரும் என்பதை நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.