ஆயுத பூஜை அன்று தளபதி 66 பூஜை.!? வைரலாகும் புதிய தகவல்.!

ஆயுத பூஜை அன்று தளபதி 66 பூஜை நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஆயுத பூஜை அன்று தளபதி 66 பூஜை நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

unknown node

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

இந்நிலையில், விஜயின் 66-வது படத்தை இயக்குனர் வம்சி பைடிபல்லி இயங்குவதாகவும், படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க வுள்ளதாகவும் நேற்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

unknown node

இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளத்தில் விஜயின் 66-வது படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த வகையில், தளபதி 66 படத்திற்கான பூஜை நடைபெறும் தேதி குறித்து தகவல் தற்போது பரவி வருகிறது.

அதன்படி, விஜயின் 66 -வது படத்திற்கான பூஜை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.