தளபதி 67 அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.!

தளபதி 67 படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.

தளபதி 67 படம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

unknown node

இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

unknown node

அடுத்ததாக தளபதி 67 படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

unknown node

அப்போது ரசிகர் ஒருவர் விஜய் – வெற்றி மாறன் திரைப்படம் குறித்து கேட்டார் அதற்கு பதிலளித்த ஜிவி ” வெற்றிமாறன் – விஜய் இருவரும் ஒன்றாக பணிபுரிய ஆவலோடு இருக்கின்றனர். அதற்கான நேரம் சரியாக அமையவில்லை. அவரும் அவர்கள் இருவரும் அடுத்த வருடத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.” என கூறியுள்ளார்.