தளபதி விஜய்க்காக இணையும் துப்பாக்கி படநிறுவனமும் – மாஸ்டர் கூட்டணியும்.!?

தளபதி விஜயின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்

தளபதி விஜயின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளாராம். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது எனவும், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் முதல் கொரோனா அலைக்கு பிறகு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து சினிமாவாசிகள் மத்தியில் நிம்மதி பெருமூச்சு வைத்த திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். லலித் குமார் தயாரித்து இருந்தார்.

unknown node

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையும் என அப்போதே கூறப்பட்டது. நடிகர் விஜய் அடுத்தடுத்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாகிவிட்டார்.

unknown node

லோகேஷும் அடுத்து உலகநாயகனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அதற்கடுத்ததாக விஜய்யை வைத்து புதிய படம் இயக்க கதை கூறியிருக்கிறாராம். ஆனால், இந்த படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் தயாரிக்கிறாரா அல்லது கலைப்புலி தாணு தயாரிக்கிறாரா என குழப்பத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதில் துப்பாக்கி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை விஜய்க்கு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான் விஜயின் 67வது திரைப்படத்தை தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.