'வலிமை' பர்ஸ்ட் லுக் எப்போது.? தயாரிப்பாளர் தேதி முடிவு பண்ணிட்டாங்க போல.?

It has been reported that boney kapoor, the producer of Valimai, is planning to release the first look poster of Valimai on March 11.

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து பர்ஸ்ட் லூக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று காத்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், ஒரு அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி வெளியிட வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவலும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.