சமந்தாவின் 'ஷகுந்தலம்' படத்தின் படப்பிடிப்பு எப்போது.?

It has been reported that the shooting of Samantha's next historical film Shakunthalam will start from March 20.

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார்.

மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஷகுந்தலம்’ படத்தினை அனுஷாவின் ருத்ரமாதேவி படத்தினை இயக்கிய குணசேகர் இயக்குகிறார்.இதில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம் தான் அணுகினாராம் . ஆனால் அவர் மறுக்கவே கடைசியாக சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

அதன் பின் சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் பிரபல மலையாள நடிகரான தேவ் மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகை சமந்தா தற்போது நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு மார்ச் 20-ம் தேதி முதல் ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் போடும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.