சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள்.
unknown nodeஇந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், கூட அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் தான் அதிகமாக வருகிறது.
இதையும் படியுங்களேன்-ஜெயிலர் படத்தில் சம்பளத்தை குறைத்த சூப்பர் ஸ்டார்.?! காரணம் என்ன தெரியுமா..?
unknown nodeஇதனால் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
unknown nodeவரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால், படத்திற்கான வசூல் இன்னும் அதிகமாகும் என கூறப்படுகிறது, என்னதான் படம் நடிப்பதால் அண்ணாச்சியை பலர் கலாய்த்தாலும் கூட, அதையெல்லாம் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு அண்ணாச்சி தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.