உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால், அது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தான். இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படம் திரையிடப்பட்டு வசூல் வேட்டையில் உலகம் முழுவதையும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இப்படம் சீனாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 334 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து, இப்படம் உலகம் முழுவதும், 1403 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் நேற்று இந்தியாவில் மட்டும், 50 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியாகி 3 வார முடிவில், 7 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.