சூப்பர் ஸ்டாரின் சகோதரனாக நடிக்க விருப்பும் ஹாலிவுட் நடிகர் பில் டியூக்!

Default Image

தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படம் தர்பார்.இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரும் இயக்குனருமான பில் டியூக் நடிக்க வாய்ப்பு தருமாறு ஏ.ஆர் முருகதாஷிடம் கோரிக்கை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இவருக்கு சமீப காலமாகவே தென்னிந்திய சினிமா மீது அதிக நாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வான்ட்டடாக வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இப்போது ஒருபடி மேலே சென்று தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு தமிழ் பேச வராது.ஆனால் எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு தூரத்து அமெரிக்க சகோதரனாகவோ அல்லது நயன்தாராவுக்கு மாமாவாகவோ நடிக்க முடியும்.
அவர்கள் கூட என்னால் நடிக்க முடியும் என்றே சொல்வார்கள்.எடிட்டர் ஸ்ரீகர் பிரசாந்த் மற்றும் சந்தோஷ் சிவனாலும் என்னை எப்படியாவது சரி செய்ய முடியும்.இதைபற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்