சமந்தாவின் "யசோதா" திரைப்படம் எப்படி இருக்கு..? ட்விட்டர் விமர்சனம் இதோ...

நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும்

நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

unknown node

Yashoda Trailer [Image Source: Twitter }

படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

unknown node

Yashoda Review [Image Source: Twitter }

இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” படத்தில் சமந்தா மற்றும் வரலட்சுமி நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தில் பாடல்கள் இல்லாதது மிகப்பெரிய பக்க பலமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

unknown node

Yashoda [Image Source: Twitter }

மற்றோருவர் “படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், சமந்தா கேரியரில் நல்ல வெற்றிப்படமாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்”. படத்தை பார்த்த மற்றோரு நெட்டிசன் ” படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும் மணி சர்மாவின் பின்னணி இசை மெய்சிலிர்க்க வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இந்த படத்திற்கு நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படத்தின் ஓப்பனிங் வசூல் நன்றாக வரும் என தெரிகிறது.