நான் மன்னிப்பு கேட்கவும் தயார் : பாடகர் கார்த்திக்

This cinema news gives information about i am ready to apologize singer karthik - nan mannippu ketkavum thayaar paadakar kaarthi

பாடகர் கார்த்திக் தமிழ், இந்தி, கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் பாடி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இவர் பாடிய பாடல்கள் மிகப் பிரபலமானது.

இந்நிலையில், மீடூ சர்ச்சை கிளம்பியபோது பாடகி சின்மயி பாடகர் கார்த்தி குறித்தும் சில காட்டமான பதிவுகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் கார்த்திக் தற்போது மவுனம் கலைத்திருக்கிறார்.

இது குறித்து பாடகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன் என பாடகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருக்கமான நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.