நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்! இயக்குனர் பாரதிராஜா அதிரடி!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சாதிய அடக்கு முறையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ள நிலையில், இப்படத்திற்கு பல அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மக்களாகிய நாம் அசுரனை வரவேற்போம். தமிழர்களுக்குள் ஜாதி வேற்றுமை இருக்க கூடாது என்பதை அசூரன் தெரிவித்துள்ளது.
மேலும், அது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக நான் மன்னிப்பு கெடுக்க கொள்கிறேன்.’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025