நான் உண்மையை பேசினால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள் : நடிகை பிரியா வாரியர் பதிலடி

this news gives information about If I talk to the truth, some will choke on the issue: actress Priya Warrior retaliate-nan

கண் அடித்த டிரெய்லர் பிரபலமானதால் கதாநாயகியாக தேர்வு செய்த என்னை ஒதுக்கி விட்டு பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் , இதனால் தாம் வருத்தம் அடைந்ததாக நூரின் ஷெரிப் கூறினார்.

மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 14 -ம் தேதி காதலர் தினம் அன்று வெளியானது.இப்படத்தில் பிரியா வாரியர் கண் அடித்து புருவ அசைவு காட்சிகள் இடம் பெற்றது.

இந்த காட்சி டிரெய்லரில் வெளியானது.இந்த கட்சி ரசிகர்கள் மத்தியில் பிரியா வாரியருக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.

இதனால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாறு  தயாரிப்பாளர் கூறியதால் கதையை மாற்றி பிரியா வாரியரை கதாநாயகி மாற்றினேன் என படத்தின் இயக்குனர் உமர் லூலூ தெரிவித்தார்.

பிரியா வாரியரை விட இரண்டாவது கதாநாயகியாக நடித்த நுரின் ஷெரிப் திறமையான நடிகை என கூறினார்.

கண் அடித்த டிரெய்லர் பிரபலமானதால் கதாநாயகியாக தேர்வு செய்த என்னை ஒதுக்கி விட்டு பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் , இதனால் தாம் வருத்தம் அடைந்ததாக நூரின் ஷெரிப் கூறினார்.

இதனால் ரசிகர்களும் பிரியா வாரியரை சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இதற்கு பதில் அளித்த பிரியா வாரியர், “நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என அமைதியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.