நடிகை மஞ்சிமா மோகன், கவுதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்த படத்தினை தொடர்ந்து, இவர், தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை என்றும், ஆனால் அந்த படங்களுக்கு ஏற்கனவே நடிகைகளை முடிவு செய்துவிட்டனர். எனவே அதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு நடிகையாக எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அந்த வகையில் சசிகலா கதாபாத்திரத்திலும் நடிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.