நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. தற்போது, இவர் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவரது பிறந்தநாளான இன்று அனைத்து பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரசன்னா அவரது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களை பார்த்துதான் நடிகர் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என்னுடைய வாழ்க்கைக்கு உங்களுடைய முகவரி படம் தான் இன்ஸ்பிரேஷன். நீங்கள் சொன்ன ‘Never Ever Give up’ என்ற வரிகள் எனக்காக சொன்னது போல் இருந்தது என்றும், தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
unknown node