பிரமாண்ட இயக்குனருடன் இணைகிறாரா தல அஜித்.?அதுவும் "முதல்வர்"செக்கன்ட் பார்ட்டா .?

It has been reported that Thala Ajith is next on the internet for the first time with Pramanta director Shankar and it is Muthalvan-2.

தல அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல் முறையாக இணைய உள்ளதாகவும் ,அது முதல்வன்-2 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தல அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனருடன் முதல் முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தல அஜித் அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுவும் அந்த திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.இது உறுதி செய்யப்படாத தகவல் தான் . இருப்பினும் அஜித் மற்றும் ஷங்கர் இணைந்தால் அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை இயக்கி வந்த நிலையில் சில பல காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.