சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா.?

It has been reported that Vijay Sethupathi will play the lead role in the biopic of the late actress Silk Smitha.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா .இவர் 1996-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் “டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் படமாக்கப்பட்டதும் ,அதற்காக வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தமிழில் படமாக்கப்பட உள்ளதாகவும்,அதற்கு ‘அவள் அப்படித்தான்” என்று டைட்டில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அதனுடன் இந்த படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தினை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளதாகவும், நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் சில்க் ஸ்மிதா வேடத்தில் தெலுங்கு நடிகை அனுசுயா நடிப்பதாகவும் கூறப்பட்டது.ஆனால் அதனை அனுசுயா மறுத்துள்ளார்.

தற்போது தமிழில் உருவாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது