ஜல்லிக்கட்டு தீர்ப்பு..போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குகிறேன்..நடிகர் சூர்யா டிவிட்.!!

suriya about jallikattu

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

jallikattu and supreme court
jallikattu and supreme court [Image source : file image ]

அந்த வகையில், நடிகர் சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் கூறியதாவது ” ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது| என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.

இரு மாநில அரசுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குகிறேன்” என பதிவிட்டுள்ளார். இத பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kanguva
Kanguva [Image source : twitter/ @letscinema]

மேலும், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்