கார்த்தியின் படத்தில் இணையும் ஜோதிகா !!!

This cinima news is gives information about Jothika to join Karthi's film-karthiyin padathil inaiyum jothika

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர்.

இயக்குனர் ஜீது ஜோசப் இயக்க இருக்கும் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த மாதம் 14 ந்தேதி  வெளிவந்த திரைப்படம்  ‘தேவ்’.இந்த படம் தற்போது திரையில் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்த் படத்தை அடுத்து கார்த்தி  “மாநகரம்”  பட இயக்குனர் இயக்கத்தில் “கைதி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு  புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி இவ்விரு படங்களை அடுத்து ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.