தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நேற்று நடைபெற்றது.144 தடை உத்தரவையும் மீறி போராட்டம் மாபெரும் ஏழுச்சி பெற்றது இதனால் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்டவை தாண்டி துப்பாக்கி சூடும் பொதுமக்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் நடத்தப்பட்டது.
unknown nodeஇதில் போராட்டக்காரர்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் குறித்து நேற்று அறிக்கை விட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மக்கள் அமைதியாக போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது. அரசின் அலட்சியமே தவறுகளுக்கு காரணம்.இதில் குடிமக்கள் குற்றவளிகள் இல்லை என்றார்.
unknown nodeஇந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் “தம் சொந்த மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பை பொழிந்த தூத்துக்குடி சகோதர சகோதரிகளின் சோகத்தில் பங்குகொள்ள தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்