#Breaking: கங்கனா ரனாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு!

Bollywood actress Kangana Ranaut, who starred in Mani Karnika and Banga, has been declared the National Award for Best Actress.

மணி கர்னிகா, பங்கா படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஓத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மணி கர்னிகா, பங்கா படங்களில் நடித்தகங்கனாரணாவத்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.