நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காஞ்சனா படத்தில் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது காஞ்சனா-3 இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி பல கோடிகளை வசூல் செய்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தை ஹிந்தியில் எடுப்பதற்கான அனைத்து வேலைகளும் துவங்கியுள்ளது.
காஞ்சனா படத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில், இயக்குனர் அக்ஷய் குமார் இயங்குவதாகவும், இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.