சுல்தானாக மிரட்டிய கார்த்தி... வெளியானது டிரைலர்..!

The trailer of the movie Sultan starring Karthi has been released

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து. அடுத்ததாக படத்திற்கான டிரைலரை தற்போதய படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, நெப்போலியன், ராமச்சந்திரன் ராஜூ, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.