கார்த்தியின் அடுத்த படம் "விருமன்".! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

கார்த்தியின் அடுத்த திரைப்படத்திற்கு விருமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கார்த்தியின் அடுத்த திரைப்படத்திற்கு விருமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சர்தார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் “விருமன்” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது. மேலும், படம் அடுத்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.