பாலிவுட்டில் இரு வேடங்களில் கீர்த்தி சுரேஷ்

This cinima news gives information about Keerthi Suresh has two roles in Bollywood-Bollywoodil irandu vedankalil keerthisuresh

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு பாலிவுட் படத்தில் நாயகியாக  நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  இளம்வயது தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் ,தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மகாநதி” படம் தற்போது இவருக்கு பல விருதுகளை குவித்து வருகிறது.மேலும் இந்த படம் இவருக்கு மிக பெரிய பாராட்டையும் பெற்று தந்தது.

இந்நிலையில் இவர் போனி கபூர் தயாரிக்கும் ஒரு பாலிவுட் படத்தில் நாயகியாக  நடிக்க இருக்கிறார்.இந்நிலையில்  1950களில் இந்திய கால்பந்து அணி சிறப்பாக விளையாடுவதற்கு முக்கிய காரணமாக இருந்த கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது.

அமித்சர்மா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  இளம்வயது தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என இரு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார்.