துணிவு, வாரிசு படத்தின் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்து..! எங்கு தெரியுமா...?

துணிவு, வாரிசு படத்தின் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்தான காரணத்தால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்.

துணிவு, வாரிசு படத்தின் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்தான காரணத்தால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்.

எட்டு ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் துணிவு திரைப்படமும், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று வெளியானது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் துணிவு திரைப்படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சியும், வாரிசு படத்தின் அதிகாலை 4 மணி காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு படங்களின் சிறப்பு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக திரையரங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் ரத்தான காரணத்தினால் தென்காசி மாவட்டத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.