ராசாக்கண்ணுவின் கல்லுவீட்டு கனவை நனவாக்கும் முயற்சியில் லாரன்ஸ்.! ஜெய் பீம் மீண்டும் வென்றது.!

நிஜத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கும் ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு சொந்த வீடு கட்டித்தர முன்வந்துள்ளார் நடிகர் லாரன்ஸ்.
சூர்யா நடிப்பில் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். சூர்யா முதன் முதலாக வக்கீலாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை T.J.ஞானவேல் இயக்கி இருந்தார். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருந்தனர்.
ராசாகண்ணுவாக மணிகண்டனும், செங்கொடியாக லிஜிமோல் ஜோஸ்-ம் அவர்களது கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர். அதில், ராசா கண்ணுக்கும் , செங்கொடிக்கும் சொந்தமாக கல்லு வீடு கட்டுவது கனவாகவே இருக்கும்.
இந்த கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. நிஜத்தில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி இன்னும் உயிருடன் ஏழ்மை நிலையில் இருக்கிறார். அதனை ஒரு இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதனை பார்த்த நடிகர் லாரன்ஸ் அந்த இணையதளம் மூலம் பார்வதி அம்மாளின் நிலைமை தெரிந்துகொண்டு, அவருக்கு சொந்தமாக வீடு கட்டி தர முன்வந்துள்ளார். இதனை அவரே தனது இணையதளத்தில் செய்தியாக வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பழங்குடி இருளர் மக்களில் 67 குடும்பங்களுக்கு பட்டா வழங்க விழுப்புரம் ஆட்சியர் மோகன் அண்மையில் ஆணை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
A house for Rajakannu’s family ???????? #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo
— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025