நடிகர் விஜய் நடிப்பில் ஒருவாகியுள்ள படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறகிறது. இதில் குட்டிகதை மூலம் விஜய் அரசியல் பேசுவாரா என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
காரணம் நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அங்குதான் அவர்களை உட்கார வைக்க வேண்டும் என்று பேசினார் அப்போது விஜயின் இந்த பேச்சு வைரலாக மாறியது. மேலும் அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று விவாதங்களும் அனல் பறந்தன.
unknown nodeவிஜய் ஆளுங்கட்சியை தான் கூறுகினார் என்றும்,அவர் அரசியலுக்கு வருகிறார் என்று அரசியல் களங்களால் அப்போது கணிக்கப் பட்டன.தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.
unknown nodeஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள இந்தப் படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக களமிரங்கியுள்ளார்,நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், நாசர் உள்ளிட்டோர் பல முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை,சேவியர் பிரிட்டோதயாரித்து உள்ளார்.
unknown nodeஇன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவானது விஜய்யின் முந்தைய படங்களைப் போல் இருக்காது என கூறப்படுகிறது.மேலும் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு கூட அனுமதி இல்லையாம், படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவாக திட்டமிடப் பட்டுள்ளது.
unknown nodeநேற்று வெளியான “வாத்தி ரெய்டு பாடல்”வெளியானதை தொடர்ந்து இவ்விழாவில், விஜய் என்ன பேசப் போகிறார் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. சமீப காலமாகவே தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசும் விஜய் இந்த விழாவிலும் அரசியல் பேசுவாரா? என்று ஆவலுடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர் .