மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால். இந்த தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கொச்சியில் நேற்று மலையாள நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கின. இதில் தலைவர் பதவிக்கு மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே இடைவேளை பாபு, ஜெயசூரியா, சித்திக் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், வேட்புமனு தாக்கல் கடைசி தேதி வரையில் இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆதலால்,நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நடிகர் மோகன்லால் 2வது முறையாக மலையாள நடிகர் சங்கத்தில் தலைவராக பதவி ஏற்கிறார்.
மேலும், 2 துணை தலைவர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது. இதில் துணை தலைவர்களாக மணியன் பிள்ளை ராஜு மற்றும் நடிகை ஸ்வேதா மேனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதுபோக நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக லால், விஜய் பாபு, பாபுராஜ், மஞ்சு பிள்ளை, லெனா, ரஜனா நாராயணன் குட்டி, சுரபி, சுதீர் கரமனா, டினி டோம், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…