பிரதீப்புக்கு ஹாட்ரிக்? டியூட் படம் எப்படி இருக்கு! நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனம்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டியூட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது.

pradeep ranganathan dude

சென்னை :பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக டியூட் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (அக்டோபர் 17)-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், இதுவரை படம் பார்த்துவிட்டு தங்களுடைய எக்ஸ் வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கூறியுள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் “படம் நன்றாக இருக்கிறது. பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு ஒவ்வொரு படத்திற்கும் முன்னேறி போய்க்கொண்டு இருக்கிறது. அவருடைய நடிப்பும் தனித்துவமாக உள்ளது. ஏற்க்கனவே இரண்டு படங்களில் அவருடைய நடிப்பு அருமையாக இருந்தது போல இந்த படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்”எனவும் பதிவிட்டுள்ளார்.

unknown node

படத்தை பார்த்த மற்றொருவர் ” பிரதீப் மற்றும் மமிதா கம்போ அருமையாக இருந்தது. அதைப்போல, சரத்குமார் கதாபாத்திரமும் சிறப்பாக உள்ளது. மெதுவாக படம் தொடங்கினாலும் இடைவெளி 20 நிமிட காட்சி மிகவும் அருமையாக இருந்தது. இறுதி காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அது குறைவாக இருந்தாலும் படத்தில் நகைச்சுவை மிகவும் அருமையாக இருந்தது” என பதிவிட்டுள்ளார்.

unknown node

படத்தை பார்த்த மற்றொருவர் ” பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். காமெடி எமோஷனல் காட்சிகள் வரும்போது மிகவும் சிறப்பாக நடிக்கிறார்” என கூறியுள்ளார்.

unknown node

படத்தை பார்த்த மற்றொருவர் ” படம் மிகவும் அருமையாக இருந்தது. ஒரு சில காட்சிகள் இப்படியெல்லாம் இருக்குமா? என்று யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் படம் நல்ல நகைச்சுவை மற்றும் எமோஷனலாக இருந்தது” என தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node

ஏற்கனவே, லவ் டுடே எனும் திரைப்படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து டிராகன் திரைப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அந்த ஹிட் வரிசையில் டியூட் படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.