குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Good Bad Ugly BO

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித் படங்கள் என்றாலே முதல் நாளில் அதிகமாக வசூல் செய்துவிடும். எனவே, குட் பேட் அக்லி படம் அவருடைய கேரியரில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள காரணத்தால் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்த கணிப்பின்படி படம் எவ்வளவு கோடி வசூல் செய்யும் என்பது பற்றிபார்ப்போம். BFilmy Official என்கிற பாக்ஸ் ஆபிஸ் தகவலை வெளியிடும் நிறுவனம் கணித்த தகவலின் படி, குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 47 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் எனவும், இந்தியாவில் மட்டும் 31 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவலை தெரிவித்துள்ளது.

அதைப்போல, BoxOffice Tamil தெரிவித்துள்ள தகவலின் படி, குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 30 கோடிகள் வசூல் செய்யும் எனவும் உலகம் முழுவதும் 50 கோடிகள் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதைப்போல, சினிமா வட்டாரத்தில் நெருக்கமாக இருக்கும் சில விமர்சகர்கள் தமிழ் சினிமாவில் குட் பேட் அக்லி வசூலில் புதிய சாதனை படைக்கலாம் எனவும் கூறி வருகிறார்கள்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக குட் பேட் அக்லி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற தகவல் தெரியவேண்டும் என்றால் நாளை வரை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.  நாளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்