வடசென்னை பார்த்து முதலில் வருத்தப்பட்டேன்...உண்மையை உடைத்த கிஷோர்!

அரசன் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கும் என இயக்குநர் வெற்றிமாறன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

vadachennai kishore

சென்னை :இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு (சிலம்பரசன்) நடிக்கும் ‘அரசன்’ திரைப்படம் சிம்புவின் 49-வது படமாக உருவாகவுள்ளது. வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்ஸில் உருவாகும் இப்படம் ரசிகர்கள்  மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

படத்தில் வில்லனாக கன்னட நடிகர்கள் கிச்சா சுதீப் அல்லது உபேந்திரா நடிப்பதற்கும், கதாநாயகியாக சமந்தா அல்லது சாய் பல்லவி நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. இதை இயக்குநர் வெற்றிமாறனே உறுதி செய்துள்ளார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவான ‘மாஸ்க்’ படத்தின் நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், “அரசன் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கும்” என்று அறிவித்தார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வடசென்னை யுனிவர்ஸில் உருவாகும் இப்படம் சிம்புவின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் கிஷோர் ‘அரசன்’ படத்தில் வடசென்னை செந்தில் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். “வெற்றிமாறனின் அழைப்புக்காக காத்திருக்கிறேன். வடசென்னை படத்தில் நான் நடித்த காட்சிகளில் பல இடம்பெறவில்லை. முதலில் படத்தை பார்க்கும்போது வருத்தப்பட்டேன். இப்போது அவற்றை வெளியிட வேண்டும்” என்று கிஷோர் கூறியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.