இயக்குநர் நவீன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகராகவும் ,இயக்குநராகவும் ,எழுத்தாளராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிவடைந்தது.
இதனையடுத்து இவர் தற்போது “அலாவுதீன் அற்புத கேமரா ” படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் அவரது பதிவு திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “எங்களுக்கு நடந்தது சாதி மத பேதமில்லாத திருமணம் நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள்” என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.