ஓ சொல்றியா மாமா பாடலை ஓரம்கட்ட போகும் ‘லியோ’ பாடல்..? மடோனாவை களமிறக்கி படக்குழு செய்த சூப்பர் சம்பவம்.!!

ஒரு படங்களில் பாடல்கள் என்பது எவ்வளவு முக்கியம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும்,இத்தகைய பாடல்களில் படங்களில் நடிக்கும் நடிகைகளை தவிர்த்து வேறு சில நடிகைகளை மட்டும் ஒரு பாடலில் நடனம் ஆட வைத்தால் சற்று வித்தியாசமாக கவரும் வகையில் இருப்பதால் பல இயங்குனர்கள் தங்களுடைய படங்களில் மற்ற நடிகைகளை வைத்து ஒரு பாடலில் நடனம் ஆட வைத்துவிடுகிறார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் கூட சமந்தா ஓ சொல்றியா மாமா பாடளுக்கு அட்டகாசமாக நடனம் ஆடி இருந்தார். அந்த பாடல் வெற்றியடைந்தது மட்டுமின்றி படத்தின் ப்ரோமோஷனுக்கும் நன்றாக உதவியது. அந்த பாடல் தற்போது பல மில்லியன்களை கடந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அதே போலவே அதேயே மிஞ்சும் அளவிற்கு விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் ஒரு பாடல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த பாடல் ஓ சொல்றியா மாமா பாடல் போல கவர்சி பாடலா என்று தெரியவில்லை. ஆனால், அந்த பாடலை மிஞ்சும் அளவிற்கு அனிருத் தரமாக இசையமைத்துள்ளாராம்.

அனிருத் இசையமைத்துள்ள அந்த பாடலை விஜய் தனது குரலில் படியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த பாடலில் பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மடோனா விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் உறுதியானால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. மேலும் வரும் ஜூன் 22-ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள் வருகிறது. எனவே, அவருடைய பிறந்த நாளில் அந்த பாடல் வெளியாகலாம் என தெரிகிறது.