முதல் நாளிலே தல படம் வசூலை தெறிக்க விட்டது !! வசூல் எவ்வளவு தெரியுமா !!!!

பேட்ட ,விஸ்வாசம் கடும் போட்டிகளுக்கிடையே நேற்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த படங்களை

பேட்ட ,விஸ்வாசம் கடும் போட்டிகளுக்கிடையே நேற்று ரிலீஸ் ஆனது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த படங்களை அனைத்து பிரபலங்களும் ,ரசிகர்களும் உற்சாகமாக பார்த்து கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திரைக்கு வந்த  பேட்ட , விஸ்வாசம் படங்களின்  வசூலை பொறுத்த வரை சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டுமே பேட்ட படம்  நல்ல வசூலை அள்ளியுள்ளது.

தென் தமிழகம் முழுவதும்  ‘விஸ்வாசம் ‘ படம் தனது வெற்றியை நிலைநாட்டியுள்ளது . அஜீத்தின் ‘விஸ்வாசம்’ சுமார் 14.5 கோடி வரை வசூலித்து முன்னிலையில் உள்ளது.’ மேலும் ரஜினியின் ‘ பேட்ட’  அதன் முதல் நாள் வசூலில்  11.5 கோடியை எட்டிப்பிடித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.