நடிகை நிக்கி கல்ராணி வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர்.இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
கடை திறப்பு விழாக்களில் பங்கேற்க ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே வசூலிப்பதால் நடிகை நிக்கி கல்ராணியை தேடி தொழில் அதிபர் ஓடி வருகின்றனர்.
unknown nodeசுப்ரீம் மொபைல்ஸ் கடையின் விளம்பர தூதுவராக இருப்பவர் நிக்கி கல்ராணி. தமிழகம் முழுவதும் திறக்கப்படும் சுப்ரீம் மொபைல்ஸ் திறப்பு விழாவில் தவறாமல் நிக்கி கல்ராணி கலந்து கொள்கிறார்.
unknown nodeஇதற்கு ஒரு நாளைக்கு நிக்கி கல்ராணிக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவு மற்றும் தங்குவதற்கான செலவை சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் கொடுத்து விடுகிறது. இவரை பார்ப்பதற்கும் கடை திறப்பு விழாவில் நல்ல கூட்டம் கூடுகிறது.
unknown nodeஇதனால் சுப்ரீம் மொபைல்ஸ் கடை திறப்பு விழாவில் மட்டும் கலந்து கொண்டு வந்த நிக்கி கல்ராணியின் பார்வை தற்போது ஜவுளிக்கடை, நகைக்கடைகளின் பக்கமும் திரும்பியுள்ளது.
unknown nodeநல்ல மார்க்கெட் இருக்கும் போதே காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும் என்கிற பழமொழிக்கு ஏற்ப மற்ற கடைகளின் திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதற்கு முன்வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 1லட்சம் ரூபாய் என்று இதற்கு ரேட்டும் பிக்ஸ் பண்ணிவிட்டார்.
unknown nodeஅமலா பால், கீர்த்தி சுரேஷ், சமந்தா போன்றோர் திறப்பு விழாக்களில் பங்கேற்க பல லட்சங்கள் கேட்கும் நிலையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கடைதிறப்பு விழாவில் பங்கேற்பதால் தற்போது நிக்கி கல்ராணியை புக் செய்யும் வேலையில் தொழில் அதிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
unknown nodeunknown node