Manjummel Boys OTT Rights:இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது இந்த படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளத்தை தாண்டி, தமிழில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
unknown nodeManjummel Boys in tamil [File Image]உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம், தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது. இப்படி மலையாள சினிமாவில் மிகப்பெரிய வசூலில் வேட்டை நடித்திருக்கும் இந்த படத்தின் ஓடிடி உரிமையை வாங்குவதற்கு முன் வரவில்லையாம்.
தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடிக்கு விற்க முன் வந்ததாகவும், அதனை முதலில் ரூ.10 கோடிக்கு தான் வாங்குவதற்கு முன்னணி ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது. ஒரு வழியாக பேச்சு வார்த்தைகள் சுமுமாக முடிவடைந்து ரூ.20 கோடிக்கு ஒகே செய்துள்ளதாம் பிரபல ஓடிடி நிறுவனம்.
unknown nodeManjummel Boys {File Image]
அது வேற யாருமல்ல, முன்னணி நிறுவனமான ஹாட்ஸ்டார் தான் வாங்கியுள்ளது. அதன்படி, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீசாகிறது. இதற்கிடையில், இப்படம் ஏப்ரல் 6ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது.
