திரையரங்கு வேட்டையை தொடர்ந்து OTT-இல் வெளியாகும் 'மஞ்சுமெல் பாய்ஸ்'திரைப்படம்.!

Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸ் படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Manjummel Boys

Manjummel Boys:மஞ்சும்மல் பாய்ஸ் படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

குணா குகையை மையமாக வைத்து இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தின் மூலம் கமலின் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

மலையாளத்தில் ஒரு வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து, தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. இப்படம், உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், இப்பொழுது, பிரபலஓடிடிதளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீசாகிறது.

படத்தை பார்த்த தமிழ் பிரபலங்கள் மற்றும் இயக்குனர்களிடமிருந்து இந்த படம் நிறைய பாராட்டுகளை குவித்து. இதற்கிடையில், இப்படம் ஏப்ரல் 6ஆம் தேதி தெலுங்கில் வெளியாக உள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு பதிப்பை தெலுங்கு சினிமாவின் பிரபலவிநியோகஸ்தர்கள்விநியோகிக்கவுள்ளனர்.

சொல்லப்போனால் இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, லால் ஜூனியர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.