நீக்கப்பட்ட காட்சிகள் இருக்குமா? ‘தி கோட்’ படம் ஓடிடி ரிலீஸ் தேதி.!

விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தின் ஓடிடியில் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

The Greatest Of All Time OTT

சென்னை :இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி  வெளியான ‘G.O.A.T’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் அதிகப்படியான வசூலை ஈட்டிய இப்படத்தின் OTT பிளாட்ஃபார்ம் Netflix-ல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டது.

அதன்படி, நாளை மறுநாள் (அக்டோபர் 3 ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், முதலில் திரையரங்குகளில் நீளம் குறைக்கப்பட்டு திரையிடப்பட்டது.

இந்நிலையில், நீளம் கருதி வெட்டப்பட்ட காட்சிகளை இணைத்து இப்படம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான விடை  அக்., 3 ஆம் தேதி அன்று தெரிய வரும்.

unknown node

விஜய்யைத் தவிர, GOAT படத்தில் பிரசாந்த், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் வெங்கட் பிரபு படத்தில் அடிக்கடி நடிக்கும் வைபவ், பிரேம்கி, அஜய் ராஜ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது.