செங்கோல் திரைகதையும்,சர்கார் திரைகதையும் ஒன்று தான் என்று திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் நடிகை கீர்த்திசுரேஷ் நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளாராக ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார் அதிரடி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார் இந்த படத்தினை சன்பீக்சர்ஸ் தயாரித்து தீபாவளிக்கு வெளியிட தயார் நிலையில் உள்ளது. படம் பற்றி எதிர்பார்ப்பு குறித்து தயாரிப்பு நிறுவனமான சன்பீக்சர்ஸ் ஃபஸ்ட் லுக்,டீசர்,இசை வெளியீட்டு விழா […]
இந்த வருடம் அதிக படங்களில் நடித்த கதாநாயகி கீர்த்தி சுரேஷ் சிறிது நாட்கள் ஓய்வு எடுக்க உள்ளாராம். கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் 8 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இந்த இடத்தை பெறுவதற்கு அவர் இரவு-பகலாக உழைத்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு அவர் உற்சாகத்துடன் தொடர்ந்து நடிக்க […]
கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கை கசப்பாக இருந்தாலும் உண்மையை புரிந்து கொண்டதற்கு நன்றி என நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடம் பேசும் போது , நான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களை போன்ற […]
உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும்; அப்பாவி ரசிகன் என ரஜினியை கிண்டலடித்து முரசொலியில் கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. கடந்த 23 ந்தேதி ரஜினிகாந்த் வெளியிட்டு இருந்த ஒரு அறிக்கையில் வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்கிறான் என்பது போல் அது எழுதபட்டு உள்ளது. ‘30, 40 […]
சர்க்கார் திரைப்படத்தின் கதை செங்கோலப்படத்தின் கதை என்று தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , நடிகருமான பாக்கியராஜ் உறுதிபடுத்தியுள்ளார்… AR.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சர்க்கார்.இந்த படத்தின் கதையின் கரு செங்கோல் படத்தின் கரு என்பது உறுதி ஆகியுள்ளது. தென் இந்திய எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அவர்கள் கூறுகையில் , சர்க்கார் படத்தின் கதையும் , செங்கோல் படத்தின் கதையும் ஒன்றுதான்.இரண்டு படத்தின் கரு ஒரே சாராம்சம் தான் , நான் […]
சென்ராயனை நம் அனைவருக்கும் தெரியும். இவர் பிக்பாஸ் மூலம் பிரபலமாகியுள்ளார். இந்த நிகழ்வில் தான் அப்பாவானது குறித்து அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போனது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கமல் சொன்னது போல அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் அண்மையில் ஒரு பெட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஊட்டியில் உன்னை கொடு என்னை தருவேன் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த இடத்தில் அவர் இருந்தாராம். அங்கு அதிக குளிராக இருந்ததால், […]
விசுவாசம் படத்தில் அஜித்துள்ளதையடுத்து இந்த படம் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் அஜித்திற்கு ரசிகர் மன்றங்கள் இல்லையென்றாலும், அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பது வழக்கம். இதனையடுத்து, அவர் விசுவாசம் படப்பிடிப்பின் போது தனது ரீல் மகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இவர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனிகா என்பது குறிப்பிடத்தக்கது. source : tamil.cinebar.in
நடிகர் விஜய் நடிப்பில் 7 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் “வேலாயுதம்”.இந்த படம் வெளியான போது ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இருந்தது. இன்றும் அதே அளவுக்கு ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #7YrsofDiwaliChampVelayudham என்ற ஹாஸ்டக் மூலம் அதனை கொண்டாடுகின்றனர். வேலாயுதம் படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் வேலாயுதம் படத்திற்கு ரசிகர்கள் தந்த ஆதரவிற்கு மிக்க நன்றி அதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி விஜய் நண்பனுக்கு என்று பதிவிட்டுள்ளார். Yes it's 7 […]
பாலியல் தொல்லைகள் குறித்து, நடிகைகள் தங்களது புகார்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், housefull 4 பட பிடிப்பில் ஈடுபட்டிருந்த பாலிவுட்டின் நடன கலைஞரான ஒரு பெண்ணுக்கு 6 நபர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்கள். அந்த இடத்தில் நடிகர் அக்ஷய் குமார், ரித்தேஷ் ஆகியோர் இருந்ததாகவும், அவர்கள் தான் தன்னை போலீசில் புகார் அளிக்க சொன்னதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். source : tamil.cinebar.in
விஜயின் சர்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் நவ.6ம் தேதி வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, சர்க்கார் படம் பாக்ஸ் ஆபிஸை தாண்டி சாதனை படைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் பிரபல வெற்றி திரையரங்கின் உரிமையாளர் இந்த வருடம் திரையரங்கில் அதிக வரவேற்பு பெற்ற விவரத்தை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் சர்க்கார் மற்றும் 2.0 படம் வெளியாகவுள்ளது.இந்த விபரத்தில் மாற்றம் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுவதாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். […]
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பெங்களூரு காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார்.இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது அவருடன் “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நிபுணன் படத்தின் […]
இயக்குனர் சுசிகணேசன் போனில் தன்னை மிரட்டுவதாக நடிகை அமலாபால் மீண்டும் புகார் தெரிவித்துள்ளார். டைரக்டர் சுசிகணேசன் 13 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் டைரக்டர் லீனா மணிமேகலை புகார் கூறினார். இதனை மறுத்த சுசிகணேசன் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நடிகை அமலாபாலும் சுசிகணேசன் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். அமலாபால் கூறும்போது, ‘‘சுசிகணேசன் இயக்கிய திருட்டுப்பயலே–2 படத்தில் நடித்தபோது, அவருடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத […]
Jon James Mcmurray கனடாவின் பிரபல பாடகர். இவர் தனது பாடலுக்காக விமானத்தில் இருந்து குதித்துள்ளார். இதற்க்கு முன் இவர் விமான இறக்கையில் நடந்துள்ளார். விமானம் நடுநிலை இழந்த நிலையில் சுற்றியுள்ளது. அப்போது கீழே விழுந்த அவரின் பாராசூட் திறக்காததால், விழுந்த அவர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. source : tamil.cinebar.in
தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் தயாராகும் கேம் ஓவர் படத்திலும் நடிக்கிறார். நடிகை டாப்சி கூறுகையில் .., எதுவும் சுலபமாக கிடைத்தால் மதிப்பு தெரியாது. சினிமாவில் நான் இந்த நிலைக்கு உயர்ந்தற்கான பயணம் சுலபமாக நடக்கவில்லை. எல்லாமே கஷ்டப்படாமல் கிடைத்து விட்டால் நம்மை பெருமையாக நினைத்து விடுவோம். சினிமா துறையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ரசிகர்கள் இன்று நமக்கு காட்டும் […]
ஜெயலலிதா வேடத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பழம்பெரும் நடிகர்–நடிகைகள் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதுபோன்ற படங்கள் அதிகம் தயாராகின்றன. மறைந்த ஆந்திர முதல்–மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி ஆகியோர் வாழ்க்கை படமாகி வருகிறது. கிரிக்கெட் வீரர் டோனி, நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, இந்தி நடிகர் சஞ்சய்தத் ஆகியோர் வாழ்க்கை படங்களாகி வந்துள்ளன. இப்போது மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் 4 […]
மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பு தன்னை வெளியேற்றவில்லை என்றும், தாமாகவே அதிலிருந்து விலகியதாகவும் நடிகர் திலீப் கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கைதான நடிகர் திலீப், மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தான் வெளியேற்றப்படவில்லை என்றும், தானாவே ராஜினாமா செய்ததாகவும் தெரிவித்துள்ளார் திலீப்.முகநூலில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார் திலீப். அக்டோபர் 10 தேதியிட்ட ராஜினாமா கடிதத்தை, தன் பதிவுடன் திலீப் இணைத்துள்ளார். அம்மா அமைப்பு தன் பெயரால் […]
மீடூ-வில் நடிகைகள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுவரை வெளிவராத தகவல்கள் அனைத்தும் வெளிவருகிறது. இந்நிலையில் பல பிரபலங்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, சூப்பர் ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘மீடூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்க கூடாது’ என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். […]
பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை தெரிவிக்கும் மீடு விவகாரம் இந்தியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது. இதனை தமிழ் சினிமாவிற்க்கு பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கூறி தற்போது அறிமுகபடுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை கூறும் வேளையில், இயக்குனர் சுசி கணேசன் மீது அவரது உதவி இயக்குனர் லீணா மணிமேகலை என்பவர் பாலியல் புகார் கூறினார். இதனை இயக்குனர் மறுத்து வரும் வேலையில், தற்போது சுசி கணேசனின் திருட்டு பயலே 2வில் […]
விஜய் நடித்துள்ள சர்க்கார் படமானது சரவெடியாக பட்டய கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர், பேனர் என கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள திரையரங்கு ஒன்றில் சர்க்கார் போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தல அஜித் -இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளிவர இருக்கும் திரைப்படமே விஸ்வாசம். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் அடுத்ததாக வந்த விவேகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதால் படக்குழு இந்த படத்தை வெற்றியடைய வைக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் போஸ்டர் நேற்று காலை டிவிட்டரில் வெளியிடபட்டது. இந்த போஸ்டர் 29k தடவை ரீடிவீட் செய்யபட்டுள்ளது. […]