விஜய் சேதுபதிக்கு பார்த்திபன் என்ன பரிசு அளித்துள்ளார் தெரியுமா....?

this news tell about parthiban is what gift you have given to vijay sethupathi vijay chethupathikku paarthiban enna parisu alithullaar theriyuma

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் பள்ளி பருவ காதலை பற்றி கூறியிருப்பதால், பலரும் இந்த படத்தை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில், 100-வது நாளில் வெற்றி நடை போடும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பார்த்திபன் விஜய் சேதுபதிக்கு தனது ஸ்டைலில் பரிசு அளித்துள்ளார்.

இதனை அவர் ட்வீட்டர் பக்கத்தில், ‘ ஊரார் வெற்றியை ஊக்கி வளர்த்தால், தன் படம் தானாய் வளரும்’ என்று பதிவிட்டு அவர் அளித்த பரிசையும் பதிவிட்டுள்ளார்.