பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்!!!!கரீனா கபூர்

This cinima news is gives information about People are unaware of the emotions of the celebrities !!! Kareena Kapoor-pirabalankalin unarchikal kuriththu makkal ariyamal irukirarkal karina kapoor

நடிகர் அர்பாஜ் கான் தொகுப்பாளராக கலந்து கொண்ட  வெப் சீரிஸில் நிகழ்வில்  கபில் சர்மா, கரன் ஜோஹர், கரினா கபூர் என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

தொகுப்பாளர் அர்பாஜ் கான்,  கரீனா கபூரிடம் நீங்கள் இப்போது ஆண்டி, இளம்பெண் போல நடிக்க வேண்டாம்’ என  சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் பதிவிட்ட  பதிவை காண்பித்தார். எனவே கரீனா கபூர் பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

நடிகை கரீனா கபூர் பாலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.இந்நிலையில் இவர்  பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் நடிகர் அர்பாஜ் கான் தொகுப்பாளராக கலந்து கொண்ட  வெப் சீரிஸில் நிகழ்வில் சோனாக்‌ஷி சின்ஹா, சோனம் கபூர், கபில் சர்மா, கரன் ஜோஹர், கரினா கபூர் என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த வெப் சீரிஸ் நிகழ்வில் பிரபலங்களின்  மீது சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.

தொகுப்பாளர் அர்பாஜ் கான்,  கரீனா கபூரிடம்  ‘நீங்கள் இப்போது ஆண்டி, இளம்பெண் போல நடிக்க வேண்டாம்’ என  சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் பதிவிட்ட  பதிவை காண்பித்தார்.

உடனே அந்த  பதிவை பார்த்து முதலில் சிரித்தார்  கரினா கபூர். அதற்கு  பிறகு  ‘பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்.மேலும்  நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த விதமான  உணர்ச்சிகளும் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று கோபத்துடன் பேசினார். இந்த மாதிரியான விமர்சனங்களை கண்டு நடிகை கரீனா கபூர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.