PM நரேந்திர மோடி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை

this news gives information about PM Narendra Modi's producer boy sexually harassed-pm narendra modi thayaripalar siruvanitam

சந்திப் சிங்ஷே புது படத்திற்காக படப்பிடிப்பு இடத்தை பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அன்பாக பேசி அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை PM நரேந்திர மோடி என்ற தலைப்பில் இயக்குனர் ஓம்ங் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.இப்படத்தை  சந்திப் சிங்ஷே தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சந்திப் சிங்ஷே பற்றிய பாலியல் தொந்தரவு செய்ததாக செய்தி  ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சந்திப் சிங்ஷே புது படத்திற்காக படப்பிடிப்பு இடத்தை பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அன்பாக பேசி அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அந்த சிறுவன் அங்கு இருந்து தப்பிச் சென்று தனது தந்தையிடம் நடந்ததை  பற்றி கூறியுள்ளான்.பிறகு ஹோட்டல் ஊழியர்களிடம் அந்த சிறுவனின் தந்தை  புகார் அளித்தார் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

பின்பு சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.அவர்கள் புகார் கொடும் முன்னதாகவே ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.