கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கி இருந்தார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
unknown nodePonniyinSelvan2 [Image Source: Twitter ]
படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்-கிழிந்திருக்கும் உடையில் பயங்கர கவர்ச்சி.! வீடியோ வெளியீட்டு விருந்து வைத்த மாளவிகா.!
unknown nodePonniyin Selvan [Image Source: Twitter ]
அந்த வகையில், தற்போது படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் டிவிட்டரில் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியீட்டு ஏதோ விசேஷம் அடிவானத்தில் இருக்கிறது. என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? என பதிவிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை பார்த்த பலரும் படத்தின் ஒரிஜன் சவுண்ட் ட்ராக் (OST) நாளை வெளியாகிறது எனவும், பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Something special is on the horizon. Can you guess what?#PS #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/JCOSL4ISgW
— Lyca Productions (@LycaProductions) December 27, 2022
ஆனால், இந்த அறிவிப்பை பார்க்கையில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் தேதி தான் என சினிமா வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். ஏற்கனவே தமிழ் சினிமாவில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் தான் படைத்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதால், பெரிய சாதனை படைக்கும் என தெரிகிறது. மேலும் , நாளை இந்த படத்திலிருந்து என்ன அப்டேட் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.