தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறாது-புதிய அதிகாரி அதிரடி அறிவிப்பு

Producers' Association General Meeting will not take place - new official action announcement

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மே- 7ஆம் தேதி தமிழக அரசு இந்த வழக்கு சம்மந்தமாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் முன்னாள்  தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற இருந்தது.ஆனால் அப்பொதுக்குழு கூட்டம்  நடைபெறாது என சிறப்பு அதிகாரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை  தயாரிப்பாளர் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.