நடிகை ராதிகா ஆப்தே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரபல தமிழ் நடிகரை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை நேஹா துபியாவின் (Neha Dhupia) தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராதிகா ஆப்தே, ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் தான் செட்டில் இருந்ததாகவும், அந்தப் படத்தில் தன்னுடன் நடித்த பிரபல நடிகர் தன்னை பாதத்தில் வருடியதாகவும் தெரிவித்தார்.
unknown nodeஅந்த நடிகரை அதற்கு முன் தான் சந்தித்திராத நிலையில் அவர் அவ்வாறு நடந்துகொண்டதால் தான் அதிர்ச்சியடைந்து அவரைக் கன்னத்தில் அறைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்ததாக மும்பை மிர்ரர் (Mumbai Mirror) இதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.