கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் :ரகுல்

This cinema news tells about rahul wants to continue working with karthi - kaarthiyudan thodarnthu paniyaarra virumpukiren

நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தியுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக கூறியுள்ளார்.

இயக்குனர் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் `தேவ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது பேசிய ரகுல், கார்த்தியுடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது என்றும், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது.

அதுபோல் இப்படத்திலும் வெற்றி பெரும் என்று நம்புகிறேன். கார்த்தியுடன் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.