rajinikanth and silambarasan [file image]
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 48-வது திரைப்படமான ‘STR48’ படத்திற்கான வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிகாகத்தான் இயக்குனர் தேசிங் பெரியசாமி எழுதினார். இவர் இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில், ரஜினி அவரை நேரில் அழைத்து படத்தை பார்த்துவிட்டு பாராட்டியும் இருந்தார். பாராட்டிய பிறகு தனக்கு எதாவது கதை இருக்குமா என்பது போல கேட்க அதற்கு தேசிங் பெரியசாமி ஒரு கதையை கூறினாராம்.
அந்த கதையும் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே பேச்சுவார்தையிலே நின்றுவிட்டது. பிறகு அந்த கதையை சிம்பவுக்கு ஏற்றபடி சற்று மாற்றம் செய்து அதனை சிம்புவிடம் கூறி அவரை படத்தில் நடிக்க சம்மதம் வாங்கிக்கொண்டார். சிம்புவுக்கும் இந்த படத்தின் கதை மிகவும் பிடித்த காரணத்தால் படமும் உறுதியாக படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
பர்ஸ்ட் லவ்-ஐ விட அதுதான் இனிமையானது…வெக்கப்பட்ட அசோக் செல்வன்.!
மேலும், சிம்பு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். படத்தின் கதையை கேட்டவுடன் கதையை எந்த மாற்றமும் செய்யவேண்டாம் இதே கதையாவே படமாக எடுங்கள் என்று கூறியதாகவும் தேசிங் பெரியசாமி கூறியுள்ளார். STR48 படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…