தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். இந்த படம் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘எந்திரும் புன்னகை’ போன்ற சில வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக மிஷ்கின் நடிக்க வைத்தார்.
அவரது கதாபாத்திரம் அந்த படத்தில் பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’ மற்றும் சூர்யாவுக்கு வில்லனாக ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் அ ‘ஓ மை டாக்’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் வினய் கடந்த சில ஆண்டுகளாக நடிகை நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார். அவருடன் மாலத்தீவுகள் உட்பட பல்வேறு விடுமுறையை அனுபவிக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
வினய் மற்றும் விமலா விரைவில் காதல் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.
நடிகை விமலா ராமன் அணைத்து தென்னிந்திய மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் சேரனின் ‘ராமன் தேடிய சீதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…