கொலவெறி பாடலின் சாதனையை முறியடித்த ரௌடி பேபி பாடல்!!

தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21இல் வெளியாகி இருந்த திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவி  ஹீரோயினாக

தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21இல் வெளியாகி இருந்த திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவி  ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் கடந்த ஜனவரி 2-ம் தேதி யூட்யூபில் வெளியானது.இந்த பாடல்  ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது.

unknown node

7 ஆண்டுகளுக்கு முன் நவம்பர்16,2011 அன்று  வெளியான ஒய் திஸ் கொலைவெறி டி பாடல் 17 கோடியே  54 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

unknown node

இந்நிலையில் தற்போது ரௌடி பேபி பாடல்  17 கோடியே  56 லட்சம்  பார்வையாளர்களை கடந்தது.அதவாது தமிழ் பாடல்களில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற பாடலாக ரௌடி பேபி பாடல் மாறியுள்ளது.

unknown node

அதேபோல்  வச்சிந்தே’ பாடல் 18 கோடியே 18 லட்சம் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.இந்த பாடல்  சாய்பல்லவியின் நடனத்தால்  நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும்  ரௌடி பேபி பாடல்  வச்சிந்தே’ சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.